22 05 2012
Last update: 15:22:59 PST (Pacific Time Zone)

சரத் பொன்சேகாவுக்கு நாளை விடுதலை?

17 May 2012 01:24:00


தமிழின அழிப்புக்கு முன்னின்றவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு உரியவருமான சரத் பொன்சேகா நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியால் விடுதலை  செய்யப்படவுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைக்கேற்பவே சரத் பொன்சேகா விடுதலையாக இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2012.05.16 ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் திருமதி அனோமா பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது நாளை அல்லது நாளை மறுதினம் சரத் பொன்சேகா  விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி கூறியதாக ஏஎப்பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈ பி ஆர் எல் எவ் (நாபா) துரைரெத்தினம் சுரேஸ் அணிக்கு தாவினார்!

11 May 2012 02:58:00


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா பிரிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.


கடந்த காலங்களில் ஈபிஆர்எல்எவ் நாபா அணி உறுப்பினர்களை, விடுதலைப் புலிகள் துரோகிகள் எனக் கூறி சுட்டுக் கொன்ற வேளைகளில் மாற்று அணியான ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது பாராளுமன்ற ஆசனத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமைதியாக இருந்து விடுதலைப் புலிகளின் சகோதரப் படுகொலைகளை அங்கீகரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் இரா.துரைரெத்தினமும் அவரது தோழர்களும் இடம்பெற்று அழிக்கப்பட்ட தருணங்களில் சுரேஸின் கொள்கையில் பிடிப்பில்லாமல் எதிர்த்து வந்த துரைரெத்தினம், விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்ட இந்தத் தருணத்தில் சுயலாப அரசியலை நோக்கமாகக் கொண்டு சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியில் இணைந்து கொண்டதானது, கிழக்குப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது பத்மநாபாவின் கொள்கையில் விருப்புக் கொண்டவர்கள் அனைவருக்கும் செய்யும் துரோகமாகும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் குளிர் காயும் தீய சக்திகளின் சுவரொட்டிகள்!

10 May 2012 01:29:00


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பேரால் மீண்டும் தமிழ் மக்களை சிக்கலுக்குள் கொண்டு வர சில தீய சக்திகள் முயன்று வருகின்றனர், இதன் ஓரங்கமாக வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் தீய சக்திகளின் சுவரொட்டிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் "தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கம்" எனும் பெயரில் சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.


கோடரிக்காம்பான சிவாஜிலிங்கத்தின் கறுப்பு கொடி போராட்டம் - வீடியோ இணைப்பு

27 April 2012 02:42:00


தந்தை செல்வாவின் நினைவு தினக் கூட்டம் நேற்று 2012.04.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்ற வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சருமான சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரைக்கு கோடரிக்காம்பாகச் செயற்பட்டு வரும் சிவாஜிலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்தினார்.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ அமைப்பு தடை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அடங்கலாக தமிழர் பிரதேசங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட போது இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் ஊடாக இந்திய இராணுவத்தின் உதவியுடன் அரசியல் வேலைத்திட்டம் எனும் போர்வையில் தமிழ் மக்களுக்கு எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தது.

ஜனாதிபதி பிரேமதாசவுடன் கைகோர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீதான களையெடுப்பை ஆரம்பித்ததும் ஓடி ஒழித்த சிவாஜிலிங்கம் சார்ந்த ரெலோ அமைப்பு, தமிழர் பிரதேசங்களில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது, ஜனாதிபதியாக சந்திரிக்கா குமாரணதுங்க பதவி ஏற்றதும் பம்பலப்பிட்டியில் தலைமையத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து வந்தது ரெலோ அமைப்பு.

சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு நிதியினைப் பெற்று சுகபோக வாழ்க்கையை நடாத்தி புலி அழிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்தனர், இந்தக் காலத்தில் பாராளுமன்ற ஆசனம் முயற்கொம்பாக இருந்ததனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இணைந்து புலிகளின் மன்னிப்பைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.

யாழ் மண்ணில் இருந்தே துரோகியாக துரத்தப்பட்டு, அரசாங்கத்தின் பாதுகாப்பு நிதியினைப் பெற்று புலி அழிப்பு நிழல் யுத்தத்தை ஆதரித்து வந்த கோடரிக்காம்பான சிவாஜிலிங்கம் மட்டக்களப்பில் கால் நூற்றாண்டுக்கு மேலாக 33 வருடங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த செல்லையா ராஜதுரையை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்.

பதவி மோகம் கொண்டலையும் கோடரிக்காம்பான சிவாஜிலிங்கம் செல்லாக் காசி என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே!, சுய விளம்பரத்துக்காக இதைப்போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளிலும் சிவாஜிலிங்கம் ஈடுபடுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இன்டபோல் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் விடுதலைப் புலிகளின் நெடியவன்!

29 January 2012 14:13:00


கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஶ்ரீலங்கா படையினரால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடவும், போராட்டத்தின் பெயரால் மேலதிக பணத்தினை வசூலிப்பதனை நோக்கமாகக் கொண்டு பலர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றார்கள், இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ளவரும் நோர்வேயில் வசிப்பவருமான நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிசாரினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்படுகின்றார்.

1976.08.28ஆம் திகதி வட்டுக்கோட்டையில் பிறந்த 35 வயதுடைய சிவபரன் பேரின்பநாயகம் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாகவே இன்டபோல் பொலிஸாரினால் தேடப்படுகின்றார்.

Do you like this blog?

Loading... (rating 5) 1 vote(s)



Blog Author

Author: Eelavan Eelavan
Blogger's Profile

Tag cloud

blog      moda      cheap      poesia      reviews      art      photography      photo      fotos      poltica      eventos      curiosidades      tirinhas      videos      shopping            games      usa      movies      life      inspiration      personal      news      family      silver      filmes      digital      musica      general      music      sports      humor      noticias      imagens      fashion      review      video      foto      travel      romance     

New blogs in directory

Add your blog